HomeCropUAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி வாழைப்பயிரில் நோய் மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி வாழைப்பயிரில் நோய் மேலாண்மை

வாழை, உலகின் பல நாடுகளில் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படும் ஒரு முக்கிய பழப் பயிராகும். இது ஒரு முக்கிய உணவு மற்றும் இனிப்பு வகையாக உலகின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏற்றுமதி செய்யும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இருப்பினும், பெரும்பாலான வணிக வகை வாழைப்பழங்கள் பல்வேறு கொடிய நோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்கள் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகின்றன. அவை பயிரின் தரம் மற்றும் விளைச்சலைக் குறைக்கின்றன. மேலும், நோய்க்கிருமிகள் புதிய செயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கு விரைவாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இதனால் நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. எனவே, கரிம உள்ளீடுகள் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சிறந்த மாற்றாகும்.

நோய்களின் பட்டியல்

  1. சிகடோகா இலைப்புள்ளி நோய் 

2 ஃபுஸேரியம் வாடல் நோய் 

  1. பாக்டீரியா வாடல்

4 முடிக்கொத்து வைரஸ் நோய் 

  1. சிகடோகா இலைப்புள்ளி நோய்

அறிவியல் பெயர்: மைக்கோஸ்ஃபோரெல்லா முயூசிகோலா 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் இலைகள்

சிகடோகா இலைப் புள்ளியின் அறிகுறிகள்

  • இலைகளில் உள்ள நீள்வட்டப் புள்ளிகள் வெளிர் சாம்பல் நிற மையத்தைச் சுற்றி மஞ்சள் நிற வட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
  • புள்ளிகள் அடிக்கடி ஒன்றிணைந்து உலர்ந்த திசுக்களில் பெரிய, சீரற்ற திட்டுகளை உருவாக்குகின்றன.
  • இலைகள் விரைவாக காய்தல் மற்றும் உதிர்தல் ஆகியவற்றால் இந்த நோய் வகைப்படுத்தப்படுகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT 100 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  2 கிராம் + 0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040  2 கிராம்  2-3 5-7 நாட்கள்  மண்ணில் ஊற்றுதல் 
சைமோ பயோலாஜிக் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2-3 கிராம்  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)
  1. புசாரியம் வாடல்

அறிவியல் பெயர்: புசாரியம் ஆக்சிஸ்ஃபோரம் f.sp குபென்ஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் இலைகள்

புசாரியம் வாடலின் அறிகுறிகள்

  • பெரும்பான்மையான பயிர்வகைகளில், வாடுதல் மற்றும் விளிம்புகளில் கீழ் இலைகளில் வெளிர் மஞ்சள் நிறமாதல் ஆகியவை நோயின் ஆரம்பகட்ட காட்சி அறிகுறிகளாகும். இறுதியில், இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போகத் தொடங்கும்.
  • இந்நோயின் தனித்துவமான அறிகுறியாக, தண்டின் அடிப்பாகத்தில் வெடிப்பு காணப்படும்.
  • தண்டை குறுக்காக வெட்டும்போது, வேர்த்தண்டுக்கிழங்கின் மையத்திற்கு அருகில் செறிவான நிறமாற்றத்தை காணலாம்.
  • செடியை நீளமாக வெட்டும்போது, நிறமாற்றத்தின் தொடர்ச்சியான கோடுகள், தண்டில் நோய்‌ எதுவரை பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றன.
  • நோய் உண்டாக்கும் பூஞ்சை மண்ணின் மூலம் பரவி, முன்னிய பக்கவாட்டு திசுக்களின் வழியாக வேர்களுக்குள் நுழைகிறது.
  • விவசாய உபகரணங்கள், வாகனங்கள், பாசன நீர் மற்றும் பாதிக்கப்பட்ட வேர்த்தண்டுக்கிழங்குகள் அல்லது பக்க கன்றுகன் ஆகியவை நோய் பரவுவதற்கான எளிதான வழிகள்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  2 கிராம் + 0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  1 கிராம் + 2 – 3 கிராம்  2-3 5-7 நாட்கள்  தண்டில் ஊசி போடுதல்/தெளித்தல்/மண்ணில் ஊற்றுதல் 
  1. பாக்டீரியல் வாடல்

அறிவியல் பெயர்: சாந்தோமோனாஸ் வெசிகோலா pv முயூசாசெரம் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் இலைகள்

பாக்டீரியா வாடல் அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி மேல்நோக்கி வளரும். இலைக்காம்பு முறிவதால் இலைகள் மரத்தைச் சுற்றித் தொங்கும்.
  • வாஸ்குலர் பகுதியில் வெட்டப்படும் போது, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை நிறமாற்றம் அடையும்.
  • வேர்த்தண்டுக் கிழங்கின் மையம் நிறமாற்றம் அடைந்துள்ளது.
  • தண்டு குறுக்காக வெட்டப்படும் போது பாக்டீரியா கசிவு தோன்றும்; பழங்கள் உட்புற அழுகல் மற்றும் அடர் பழுப்பு நிறத்துடன் காணப்படும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
ஜிமோ தைமோக்ஸ்+ ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1-2 கிராம் + 0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
ஜிமோ தைமோக்ஸ்+ சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  1-2 கிராம்+ 2-4 கிராம் + 2 கிராம்  2-3 5-7 நாட்கள்  தண்டில் ஊசி போடுதல்/தெளித்தல்/மண்ணில் ஊற்றுதல்

 

  1. முடிக்கொத்து வைரஸ் நோய்

அறிவியல் பெயர்: வாழை முடிக்கொத்து வைரஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் இலைகள்

அறிகுறிகள்

  • ஆரம்பத்தில், இலையின் நடுப்பகுதியின் கீழ் பகுதியிலுள்ள நரம்புகள் மற்றும் இலைத் தண்டுகள் அடர் பச்சை மற்றும் வெளிர் பச்சை நிறத் திட்டுகளைக் காட்டத் தொடங்குகின்றன.
  • தாவரத்தின் மேற்பகுதியில் “கொத்து” போல் தோற்றமளிப்பதன் மூலம் இந்த நோய் இப்பெயர் பெற்றது. இது பாதிக்கப்பட்ட பக்க கன்றுகள் மற்றும் வாழை அசுவினிகளால் பரவுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட வாழை செடிகள் பொதுவாக காய்க்காது, ஆனால் அவை காய்த்தால், பழங்கள் திரிக்கப்பட்டதாகவும் மற்றும் சிதைக்கப்பட்டதாகவும் இருக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1 கிராம் + 0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1 கிராம் + 1-2 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)

தயாரிப்புகள்

இரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக, உயிர் பூச்சிக்கொல்லிகள் மிகவும் சுற்றுச்சூழல் நட்புடையவை ஆகும். ஏனெனில் அவை முறையாகப் பயன்படுத்தப்படும்போது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் குறைவான தீங்கு விளைவிக்கும். இருப்பினும், உயிர் பூச்சிக்கொல்லிகள், மற்ற உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் சாத்தியமான எதிர்மறை தாக்கங்களை நன்கு புரிந்து கொள்ள, பதிவு செய்த முறைகளின் மூலம் கூடுதல் சான்றுகள் தேவை. UAL இலிருந்து சிறந்த ஆர்கானிக் உள்ளீடுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. சைமோ BLT 100
  2. சைமோ பயோகார்டு WLT6040
  3. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  4. சைமோ பயோலாஜிக் 
  5. ஜிமோ தைமோக்ஸ் 
  6. ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்

1. சைமோ BLT100: இது தூள் வடிவில் கிடைக்கிறது. மேலும் இது மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் உயிரி ஊக்கப்படுத்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • இது ஒரு பரந்த நிறமாலை கொண்ட உயிரி-முகவர் ஆகும். இது வாழை சிகடோகா மற்றும் ஃபுசாரியம் வாடல் நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • சைமோ BLT 100 + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் வாழை சிகடோகா நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கப்படுகிறது. நோய் தாக்குதலின் அடிப்படையில், 3-5 வார இடைவெளியில் 1-2 முறை  மீண்டும் தெளிக்கப்படுகிறது.
  • சைமோ BLT 100 ஆனது நோயை திறம்பட நிர்வகிப்பதற்கு 2 கிராம்/ லிட்டர் பயன்படுத்தப்படுகிறது.
  1. ஜிமோ பயோகார்டு WLT6040: இத்தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் அதில் மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், புரோட்டியோலிடிக் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள், உயிரியல் ஊக்கப்படுத்திகள் உள்ளன.
  • மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் போதுமான ஊட்டச்சத்துக்களுடன் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளை பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை மறுத்து இறுதியாக SAR (முறையான வாங்கிய எதிர்ப்புத் திறனை) தூண்டுகிறது. 
  • ஜிமோ பயோகார்டு WLT6040 புசாரியம் வாடல் நோய்க்கு 2 கிராம் /லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் நோய் ஏற்படுவதற்கு முன் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 3-5 வார இடைவெளியில் 1-2 முறை தெளிக்கவும்.
  • சைமோ BLT 100 + ஜிமோ பயோகார்டு WLT 6040 + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவற்றை இரண்டு தெளிப்புகளாக, சிகடோகா நோய்க்கு உடனடித் தீர்வாக பயன்படுத்தலாம். தீவிரத்தன்மையின் அடிப்படையில் 5-7 நாட்கள் இடைவெளியில் 3-4 முறை தெளிக்கவும்.
  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.
  • இதில் உள்ள தாவர சாறுகள் தாவர SAR-ஐ (Systemic Acquired Resistance- முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கின்றன. இந்த உயிர் பூச்சிக்கொல்லி பல பூச்சிகளுக்கு எதிராக அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது குறிப்பாக பூச்சிகளின் லார்வா நிலையை குறிவைத்து அழிக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்ளும் இயக்கத்தைத் தடுக்கிறது.
  • சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் மற்றும் ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் என்ற மருந்தை அசுவினியின் மேலாண்மைக்கு ஒரு நோய்த்தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும். இதன் மூலம் முடிக்கொத்து நோயைக் கட்டுப்படுத்தலாம். தாக்குதல் கடுமையாக இருக்கும் போது 5-7 நாட்கள் இடைவெளியில் 3-4 முறை தெளிக்கவும்.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரமின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 1-2 மில்லி/ லிட்டர் தண்ணீர்.

4. ஜிமோ பயோலாஜிக்: இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இதில் ஆர்கனோமினரல்ஸ், பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நிலைப்படுத்தி போன்றவை உள்ளன.

  • ஜிமோ பயோலாஜிக் ஒரு கரிம கனிம வகையைச் சேர்ந்த பரந்த நிறமாலை கொண்ட பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் முகவர் ஆகும் மற்றும் இது மண்ணின் வளத்தையும் அதிகரிக்கும்.
  • உயிரியல் கரிம சாறுகள் மற்றும் இயற்கை தாதுக்கள் இணைந்த இவற்றின் சேர்க்கைகள் தாவர பூஞ்சையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் வாழையின் சிகடோகா இலைப்புள்ளி மற்றும் ஃபுசாரியம் வாடல் நோய்க்கு எதிராக போராட தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • ஜிமோ பயோலாஜிக் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஒரு தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கப்படுகிறது. இது தேவைக்கேற்ப 3-5 வாரங்களில் 1-2 முறை தெளிக்கலாம். அதேசமயம் ஜிமோ பயோலாஜிக் + சைமோ BLT 100 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் நோய் தீர்க்கும் நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படுகிறது. நோய் கடுமையாக இருக்கும் போது 5-7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு 2-3 கிராம்/லி.
  1. சைமோ தைமோக்ஸ்: இது ஒரு செறிவூட்டப்பட்ட பரந்த நிறமாலை கரிம பூஞ்சை மற்றும் பாக்டீரியாவினைக் கட்டுப்படுத்தும் முகவர் ஆகும்.
  • இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் செறிவு, தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைக் கொண்டுள்ளது
  • சைமோ BLT 100+ ஜிமோ தைமோக்ஸ் மருந்து புசாரியம் வாடல் நோய்க்கு எதிராக தெளிக்கப்படுகிறது. இவை நோய் தாக்கிய உடனேயே பரிந்துரைக்கப்படுகிறது. நோய் தீவிரமான நிலையில் இருந்தால் 5-7 நாட்கள் இடைவெளியில் 1 முதல் 2 மிலி/லிட்டருக்கு இரண்டாவது முறை தெளிக்க வேண்டும்.
  1. ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது மற்றும் இது அயனி அல்லாத ஆர்கனோசிலிகான் & துணைப் பொருளைக் கொண்டது.
  • இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது. 
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்-ஐ வாழைப்பழத்தின் அனைத்து விதமான நோய்களுக்கும் 0.10 மில்லி/ லிட்டர் என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.

வாழைத் தோட்டத்தை பராமரிக்க

நிலை 1: 3-4 கிலோ /ஏக்கர் ஜிமோ பயோகுரோ, 1.5-2.0 கிலோ/ஏக்கர் சைமோ பயோஃபெர்ட் & 0.5-1.0 கிலோ சைமோ பயோடானிக் AG (தூள்) ஆகியவற்றை 200 கிலோ முதல் 400 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து, மரக்கன்று நடவு செய்த பிறகு, முதல் முறை இட வேண்டும். அதாவது 15 நாட்களுக்குப் பிறகு – பக்கவாட்டில் இட வேண்டும்.

நிலை 2: 3-வது 4-வது மாதத்தில் பயன்படுத்த- பக்கவாட்டில் இடுவதற்கு: 2.0-2.5 கிலோ/ஏக்கர் ஜிமோ பயோக்ரோ, 1.0- 1.5 கிலோ/ ஏக்கர் ஜிமோ க்ரோவெல், 1.5-2.0 கிலோ / ஏக்கருக்கு சைமோ பயோஃபெர்ட் & 0.5-1.0 கிலோ சைமோ பயோடானிக் AG (தூள்) ஆகியவற்றை 200 கிலோ முதல் 400 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

சான்றிதழ்: UAL தயாரிப்புகள் OMRI மற்றும் ECOCERT ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டுள்ளன. இவை உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் முகவர். UAL ஆனது ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் ஆர்கானிக் உயிர்-தீர்வுகளை தயாரித்து சந்தைப்படுத்துகிறது. UAL ஆனது இந்தியாவில் இரண்டு உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. அவை ISO 9001:2015, ISO 14001:2015, ISO 45001 2018, மற்றும் HACCP-ஆல் சான்றளிக்கப்பட்டது. ISO 14001:2015 என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளுக்கான சர்வதேச தரமாகும். எனவே இதன் சான்றளிப்பின் மூலம் UAL தயாரிப்புகள்  சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையும், சுற்றுச்சூழல் செயல்திறனை மேம்படுத்தும் என்று உறுதியளிக்கிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்