HomeCropUAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் பூச்சி மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் பூச்சி மேலாண்மை

தக்காளி சுவையானது மற்றும் ஆரோக்கியமானது, ஆனால் அவற்றின் இலைகள், தண்டுகள், பூக்கள் மற்றும் விதைகளை உண்ணுவதற்கு காய்ப்புழு, வெள்ளை ஈக்கள், இலைப்பேன் மற்றும் அசுவினி போன்ற பல எதிரிகள் உள்ளன. இந்த பூச்சிகளிலிருந்து தக்காளிச் செடிகளை பாதுகாக்க சில விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை நிறைய தெளிப்பார்கள், ஆனால் இது நிலம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதற்கு தக்காளி அல்லது சுற்றுச்சூழல் அமைப்புக்கு சேதம் ஏற்படாமல் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் கரிம உள்ளீடுகளைப் பயன்படுத்துவது சிறந்த மாற்றாகும்.

தக்காளி பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பட்டியல்:

  1. காய்ப்புழு
  2. வெள்ளை ஈ
  3. இலைப்பேன் 
  4. அசுவினி

1. காய்ப்புழு

அறிவியல் பெயர்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா

மிகவும் பாதிக்கப்படும் தாவர பகுதி: பழங்கள் 

காய்ப்புழு சேதத்தின் அறிகுறிகள்:

  • இளம் லார்வாக்கள் ஆரம்பத்தில் இலைகளைத் தாக்கும். பின்னர், அவை பழங்களுக்குச் சென்று, உள்ளே இருக்கும் திசுக்களை லார்வாக்கள் முற்றிலுமாக உண்கின்றன.
  • இப்புழுக்கள் காயினை உண்ணும் போது, தன் தலையை உள்ளே திணித்துக் கொண்டும், அதன் உடலின் மற்ற பகுதிகளை வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இது நுழைந்த இடத்தில், பழங்களில் வட்ட துளைகள் காணப்படும்.
  • லார்வாக்கள் மொட்டுகள், தளிர்கள் மற்றும் இலைகளை உண்கின்றன.
  • ஹெலிகோவர்பா என்பது ஒரு பாலிஃபேகஸ் பூச்சியாகும். இது ஆரம்பத்தில் பச்சைப்பயறு, கோடைக் காய்கறிகள் மற்றும் மக்காச்சோளத்தை உண்டு உயிர்வாழும். பின்னர் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்தில், முதன்மை பயிரான தக்காளியில் இதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / வருமுன்காப்பு:

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2 மில்லி+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)

தீர்வு:

உடனடித் தீர்வு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)
  1. இலைப்பேன்

அறிவியல் பெயர்: திரிப்ஸ் டபாசி, ஃபிராங்கிணியெல்லா ராங்கினியெல்லா

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள், பூக்கள் மற்றும் மொட்டுகள்

இலைப்பேன் சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைப்பேன்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகளைச் சார்ந்தது.
  • இவை இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சும். இதன் காரணமாக இலை மேற்பரப்பில் வெள்ளிக் கோடுகளை நாம் காணலாம்.
  • இலைப்பேன்களின் முக்கிய இலக்குகள் பூக்களே. பாதிக்கப்பட்ட பூக்கள் முன்கூட்டியே உதிர்ந்து, மொட்டுகள் அழுகி வீணாக்கப்படுகின்றன.
  • இது தக்காளி புள்ளிகள் கொண்ட வாடல் வைரஸைப் பரப்பும் திசையனாகச் செயல்படுகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / வருமுன்காப்பு:

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

உடனடித் தீர்வு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)

3. வெள்ளை ஈக்கள்

அறிவியல் பெயர்: பெமீசியா டபாசி

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

வெள்ளை ஈக்கள் சேதத்தின் அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, அதில் குளோரோடிக் புள்ளிகள் காணப்படும்.
  • இலைகளின் கீழ் மேற்பரப்பில் சிறிய நிம்ஃப் இருப்பதைக் காணலாம்.
  • வெள்ளை ஈக்கள் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சி ஆகும். இதன் காரணமாக இலைகள் கீழ்நோக்கி சுருண்டு காய்ந்துவிடும்.
  • பெமீசியா டபாசி, தக்காளி இலை சுருட்டு நோய் வைரஸை பரப்புவதற்க்கான திசையனாகச் செயல்படுகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / வருமுன்காப்பு:

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

உடனடித் தீர்வு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)
  1. அசுவினி 

அறிவியல் பெயர்: மைசஸ் பெர்சிகே 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

அசுவினி சேதத்தின் அறிகுறிகள்:

  • முதிர்ந்த மற்றும் இளம் அசுவினிகள் இரண்டும் இளம் தாவரங்களின் சாறு மற்றும் சதைப்பற்றுள்ள பகுதிகளை உண்கின்றன.
  • முறுக்கப்பட்ட அல்லது சுருண்ட இலைகள் மற்றும் வீங்கிய கிளைகள் சேதமடைந்த தாவரங்களைக் குறிக்கின்றன.
  • இவற்றின் தாக்குதலை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், அவை தாவரத்தின் வளர்ச்சியைத் தடுக்கும். பாதிக்கப்பட்ட இலைகளில் பழுப்பு அல்லது மஞ்சள் நிறங்கள் தோன்றும்.
  • இவை “தேன் பனி” எனப்படும் ஒட்டும் திரவத்தை வெளியிடுகின்றன.  இது எறும்புகளை ஈர்த்து, தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை மறைமுகமாகத் தடுக்கும் கரும்பூஞ்சான் உருவாவதை ஊக்குவிக்கிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு / வருமுன்காப்பு:

தடுப்பு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

உடனடித் தீர்வு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழி தெளித்தல்)

தயாரிப்புகள்:

உயிர் பூச்சிக்கொல்லிகள் வழக்கமான செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட குறைவான நச்சுத்தன்மை கொண்டவை. ஏனெனில் இவை நுண்ணுயிரிகள், தாவரங்கள், எண்ணெய்கள் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும். அவை பாதுகாப்பானவை, மேலும் குறிப்பிட்ட திறன் கொண்டவை மற்றும் செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட மக்கும் தன்மை கொண்டது. பரந்த நிறமாலைக்கு மாறாக, இவை பொதுவாக இலக்கு பூச்சி மற்றும் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களை மட்டுமே பாதிக்கின்றன. வழக்கமான செயற்கை பூச்சிக்கொல்லிகள் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளையும் பாதிக்கலாம். இதனுடன் ஒரு பரப்பும் அல்லது ஒட்டும் திரவம் மற்றும் நுண்ணூட்டச்சத்தினைக் கலந்து தெளிப்பதால், தெளிக்கப்பட்ட  உடலில், கரைசலை சரியாகப் பரப்ப உதவுகிறது மற்றும் இது தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  2. சைமோ பக்ட்ரோல் 
  3. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்

1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ நிலையில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.

  • இதில் உள்ள தாவர சாறுகள் தாவரத்தில் SAR (Systemic Acquired Resistance – முறையான வாங்கிய எதிர்ப்பிணை) அதிகரிக்கின்றது. புழுக்களுக்கு எதிராக அனைத்து பயிர்களுக்கும் இந்த உயிர் பூச்சிக்கொல்லி மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
  • இது முக்கியமாக பூச்சிகளின் லார்வா கட்டத்தை குறிவைக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் மற்றும் உணவு உண்ணும் இயக்கத்தைத் தடுக்கிறது.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் மற்றும் சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவை காய் துளைப்பான் மேலாண்மைக்கான தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு தெளிக்க வேண்டும்.
  • பூச்சி தாக்குதலுக்குப் பிறகு, சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவற்றைக் கலந்து இரண்டு தெளிப்புகளாக தெளிக்க வேண்டும், தொற்று கடுமையாக இருக்கும் போது 5-7 நாட்கள் இடைவெளியில், தெளிக்க வேண்டும். தக்காளி செடியைப் தாக்கும் அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக இதனைப் பயன்படுத்தலாம்.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்-மருந்தின்  பரிந்துரைக்கப்பட்ட அளவு 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர்.

2. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள், தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.

  • சைமோ பக்ட்ரோலின் முக்கிய நன்மைகள் என்னவென்றால், இது அனைத்து வகையான பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இது ஒரு பரந்த அளவிலான பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.
  • இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் குறிப்பாக வண்டுகள் மற்றும் உறிஞ்சும் பூச்சிகளை குறிவைத்து அழிக்கிறது.
  • இதன் செயல் முறை நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்கிறது மற்றும் பூச்சியின் இயக்கம், பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவு 1.5 மில்லி/ லிட்டர் தண்ணீர்.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரடருடன் கூடிய சைமோ பக்ட்ரோல், தக்காளியில் இலைப்பேன், வெள்ளை ஈக்கள் மற்றும் அசுவினி ஆகிய பூச்சிகள் தாக்குவதை கட்டுப்படுத்தும்.
  • காய் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த, பூச்சித் தாக்குதலின் ஆரம்பத்தில், சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவற்றைக் கொண்டு இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும்  தொற்று கடுமையாக இருக்கும் போது 5-7 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம்.

3. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

  • இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்-ஐ UAL -இன் பிற தயாரிப்புகளுடன் இணைந்து பயன்படுத்தலாம். இது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அருமையான பரவலன். இது அனைத்து தெளிப்பு கரைசல்கள் மற்றும் மண்ணில் பயன்படுத்தப்படும் கரைசல்களின் செயல்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.
  • இது இயற்கையில் அயனி அல்லாதது மற்றும் கரிமமானது. இது ஒரு இந்திய NPOP – ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்ளீடு பொருளாகும். எனவே கரிம வேளாண்மையிலும் இதனை பயன்படுத்தலாம்.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் மருந்தின் அளவு, பயன்பாட்டு முறையைப் பொறுத்தது. தொட்டி கலவைக்கு, 0.10 மில்லி/லிட்டர் தண்ணீர் (அதாவது 10 மில்லி/100 லிட்டர் தண்ணீர்) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு, ஏக்கருக்கு 25 மில்லி/ 200 லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சான்றிதழ்: OMRI, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரங்களால் சான்றளிக்கப்பட்ட ZYΜΟ® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிரியல் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த சான்றுகள் இத்தயாரிப்புகள் பாதுகாப்பானது, இயற்கையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்