HomeCropUAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் நோய் மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் நோய் மேலாண்மை

உலகம் முழுவதும் தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராகும். அவை பரவலாக வளர்க்கப்படுகின்றன மற்றும் முக்கிய காய்கறி பயிராக உட்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இதன் பயிர் விளைச்சலைப் பாதிக்கும் பல நோய்களான ஃபுசேரியம் வாடல், முன்பருவ இலைக்கருகல், பின்பருவ இலைக்கருகல், சாம்பல் நோய், செப்டோரியா இலைப்புள்ளி, பாக்டீரியல் புள்ளி மற்றும் தக்காளி புள்ளி வாடல் வைரஸ் போன்ற பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. பூஞ்சைக்கொல்லிகளால் இந்த நோய்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் நோய்க்கிருமிகளை அதிக எதிர்ப்புத்திறன் கொண்டதாக மாற்றும். உயிரி பூச்சிக்கொல்லிகளை, தக்காளி நோய்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்துவதே சிறந்த வழியாகும். இவை சுற்றுச்சூழலுக்கும் பிற உயிரினங்களுக்கும் பாதுகாப்பானவை.

தக்காளி பயிரைக் தாக்கும் நோய்களின் பட்டியல்:

  1. புசாரியம் வாடல்
  2. பாக்டீரியல் புள்ளி நோய்
  3. முன்பருவ இலைக்கருகல் 
  4. பின்பருவ இலைக்கருகல் 
  5. செப்டோரியா இலைப்புள்ளி
  6. சாம்பல் நோய் 
  7. டோஸ்போ – தக்காளி புள்ளி வாடல் வைரஸ் நோய்

1. புசாரியம் வாடல்:

அறிவியல் பெயர்: புசாரியம் ஆக்சிஸ்ஃபோரம் f.sp. தக்காளி

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள் மற்றும் தண்டு

புசாரியம் வாடலின் அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில் கீழ் இலைகள் தொற்று காரணமாக மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. பின்னர்,  இலைகளில் நரம்புகள் அழிந்து போகத் தொடங்கும்.
  • இளம் இலைகளுக்கு தொற்று பரவி, அவை அடுத்தடுத்து இறக்கத் தொடங்கும்.
  • ஃபுசாரியம் வாடல் நோயின் சிறப்பியல்பு அறிகுறியாக, வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறும். இதன் காரணமாக இலைக்காம்புகள் மற்றும் இலைகள் முன்கூட்டியே உதிர்ந்து விடும்.
  • முழு தாவரமும் வாட ஆரம்பித்து பின்னர் இறந்து போகும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்பு எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித்தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்பு எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  1 கிராம் + 2-3 கிராம்  2-3 5-7 நாட்கள்  மண்ணில் ஊற்றுதல் 
  1. பாக்டீரியல் புள்ளி:

அறிவியல் பெயர்: சூடோமோனாஸ் சிரிங்கே pv தக்காளி

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் காய்

பாக்டீரியல் புள்ளியின் அறிகுறிகள்:

  • நோய்க்கிருமி பாக்டீரியா மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் இலைகளில் சிறிய பழுப்பு நிற புள்ளிகளை ஏற்படுத்துகிறது. புள்ளிகள் வட்ட வடிவில் நீரில் நனைந்த புண்களைப் போன்று காணப்படும். 
  • தீவிர நோய்த்தொற்றின் போது, நெக்ரோடிக் புள்ளிகள் தோன்றும் மற்றும் பழைய இலைகள் உதிர்ந்து விடும்.
  • இளம் பழங்களில், சிறிய ஒழுங்கற்ற நீரில் நனைந்த புள்ளிகள் போன்று காணப்படும்.
  • புள்ளிகளின் மையம் ஒழுங்கற்றதாகவும், வெளிர் பழுப்பு நிறமாகவும், மூழ்கிய மற்றும் சிரங்கு மேற்பரப்புகளாகவும் மாறும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்பு எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்பு எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ தைமோக்ஸ் + சைமோ BLT100 + சைமோ பயோலாஜிக்  1-2 கிராம் + 2 கிராம்  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. முன்பருவ இலைக்கருகல்:

அறிவியல் பெயர்: ஆல்டர்நேரியா சொலானி 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்

அறிகுறிகள்:

  • நோயின் பொதுவான அறிகுறி, இது செறிவான வளையங்களுடன் பழுப்பு நிற புள்ளிகளை தோன்றுகிறது. பார்ப்பதற்கு மஞ்சள் ஒளிவட்டத்துடன் கூடிய ‘காளைகளின் கண்’ போன்று காணப்படும்.
  • இலைகள் முன்கூட்டியே உதிரத் தொடங்கும்.
  • பாதிக்கப்பட்ட பழங்களில் கூட பழுப்பு நிற செறிவு வளையங்கள் காணப்படும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்  2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  2 கிராம்+ 1 கிராம் + 2-3 கிராம்  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. பின்பருவ இலைக்கருகல்:

அறிவியல் பெயர்: பைட்டோஃப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை, தண்டு மற்றும் பழம்

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் தண்டுகளில் ஆரம்பத்தில் கருப்பு நிறத்தில் நீரில் நனைந்த புண்கள் போன்று தோன்றும்.
  • புண்கள் வேகமாக விரிவடைந்து, முழு இலையும் அழுகி விடும்.
  • வெள்ளை நிறத்தில் வித்திகள் அதாவது ஸ்போராஞ்சியா மற்றும் ஸ்போராஞ்சியோபோர்ஸ், இலைகளில் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பழங்களில் அடர் பழுப்பு நிற புண்கள் தோன்றும்.
  • கடுமையான தொற்று காரணமாக பழங்களின் சிதைவு, திசுக்களின் அழுகலுக்கு வழிவகுக்கிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  2 கிராம்+ 1 கிராம் + 2-3 கிராம்  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. செப்டோரியா இலைப்புள்ளி:

அறிவியல் பெயர்: செப்டோரியா லைக்கோபெர்சிசி 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை, தண்டு மற்றும் பூ

செப்டோரியா இலைப்புள்ளியின் அறிகுறிகள்:

  • சிறிய, வட்டமானது முதல் ஒழுங்கற்ற புள்ளிகள் சாம்பல் மையத்துடன் மற்றும் அடர்த்தியான விளிம்புகள் ஆகியவை இலைகள், தண்டு மற்றும் பூக்களில் காணப்படும்.
  • புள்ளிகள் ஒன்றிணைவதால், இலைகள் கருகிவிடுகின்றன. மேலும், இதன் விளைவாக முழு இலைகளும் உதிர்ந்து விடுகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ BLT100 + சைமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  2 கிராம்+ 1 கிராம் + 2-3 கிராம்  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) 
  1. சாம்பல் நோய்:

அறிவியல் பெயர்: லெவீயூலெல்லா டாரிக்கா / ஆய்டியாபீஸிஸ் நியோலைக்கோபெர்சிசி 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை

சாம்பல் நோயின் அறிகுறிகள்:

  • இலைகளில் ஆரம்பத்தில் வெளிர் பச்சை மற்றும் மஞ்சள் திட்டுகள் தோன்றும்.
  • இலையின் மேற்பரப்பில் வெள்ளை ஸ்போருலேஷன், அதனுடன் தொடர்புடைய கீழ் மேற்பரப்பில் குளோரோடிக் புள்ளிகளிலும் ஏராளமான காணப்படுகிறது.
  • இலைகள் முன்கூட்டியே உதிர்தல் மற்றும் கடுமையான தொற்றின் போது தாவரம் முழுவதுமாக இறந்து விடும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ தைமோக்ஸ் +  சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1-2 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோலாஜிக் + சைமோ தைமாக்ஸ் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம் + 

1-2 கிராம் + 0.10 மில்லி

2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
ஊட்டச்சத்து: மெர்லின் நியூட்ரிக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  0.25 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. தக்காளி புள்ளி வாடல் நோய் (TOSPO):

அறிவியல் பெயர்: தக்காளி புள்ளி வாடல் வைரஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்

அறிகுறிகள்:

  • தக்காளி புள்ளி வாடல் வைரஸால் பாதிக்கப்பட்ட தாவரங்களில் இளம் இலைகளின் மேல் பகுதிகளில் வெண்கல நிறத்தை வெளிப்படுத்துகின்றன. பின்னர், அவை தனித்துவமான, நக்ரோடிக் புள்ளிகளைத்  தோன்றுகின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் கீழ்நோக்கி சுருண்டு, இறக்கும் நிலையில் காணப்படலாம்.
  • பழுத்த பழங்களில் குளோரோடிக் புள்ளிகள் மற்றும் கறைகள் பெரும்பாலும் செறிவான வளையங்களுடன் தோன்றும். 
  • இளம் பிஞ்சுகள் மங்கலான, செறிவான பகுதிகளுடன் சற்று உயர்ந்த பகுதிகளைக் காட்டுகின்றன.
  • இலைப்பேன்கள் தான் இந்த நோயை பரப்பும் முகவர்களாகச் செயல்படுகிறது.
  • தக்காளி புள்ளி வாடல் வைரஸின் முக்கிய திசையன் ‘இலைப்பேன்’ ஆகும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1 கிராம் + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

நோய்க்கான தீர்வு:

நோய்க்கான தீர்வு: அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1.5 மில்லி + 1-2 மில்லி +  0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
ஊட்டச்சத்து: மெர்லின் நியூட்ரிக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  0.25 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலையில் தெளித்தல்)

தயாரிப்புகள்:

  1. ஜிமோ பயோகார்டு WLT6040
  2. ஜிமோ பயோலாஜிக்
  3. சைமோ BLT100
  4. சைமோ பக்ட்ரோல் 
  5. ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்
  6. ஜிமோ தைமோக்ஸ் 
  7. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  8. மெர்லின் நியூட்ரெக்ஸ்

பயிர்களின் உற்பத்தி மற்றும் தரத்திற்கு நோய்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. பூச்சிக்கொல்லிகளால் பூச்சியிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், அவை சில குறைபாடுகளையும் கொண்டுள்ளன. அவை சுற்றுச்சூழல், மனிதரின் ஆரோக்கியம் மற்றும் நன்மை பயக்கும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவை பூச்சிகளின் நோய் எதிர்ப்பிற்கும் வழிவகுக்கும். காலப்போக்கில் இவற்றின் செயல்திறன் குறைவாக இருக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க, வழக்கமான செயற்கை பூச்சிக்கொல்லிகளைக் குறைவாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதும் அவசியம். மேலும், இவற்றின் செயல்திறனை மேம்படுத்த ஒட்டும் முகவர் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களுடன் இணைக்கலாம். ஒட்டும் முகவர் கரைசல்கள் தாவர மேற்பரப்பில் சமமாக பரவ உதவுகிறது, அதே நேரத்தில் ஒரு நுண்ணூட்டச்சத்து தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. சிறந்த UAL கரிம பொருட்கள் சில பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. ஜிமோ பயோகார்டு WLT6040: இத்தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் அதில் மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், புரோட்டியோலிடிக் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள், உயிரியல் ஊக்கப்படுத்திகள் உள்ளன.
  • ஜிமோ பயோகார்டு WLT6040 மட்டும் தக்காளியின் புசாரியம் வாடல் நோய்க்கு ஒரு தடுப்பு நடவடிக்கையாக நோய் ஏற்படுவதற்கு முன் பரிந்துரைக்கப்படுகிறது.
  • மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் போதுமான ஊட்டச்சத்துக்களுடன் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளைப் பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை மறுத்து இறுதியாக SAR (முறையான வாங்கிய எதிர்ப்புத் திறனை) தூண்டுகிறது. 
  • ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் தக்காளி புள்ளி வாடல் வைரஸைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஜிமோ பயோகார்டு WLT6040 மட்டும் புசாரியம் வாடல் நோய்க்கான ஒரு தடுப்பு நடவடிக்கையாக பயன்படுத்தப்படுகிறது.
  1. ஜிமோ பயோலாஜிக்: இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இதில் ஆர்கனோமினரல்ஸ், பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நிலைப்படுத்தி போன்றவை உள்ளன.
  • ஜிமோ பயோலாஜிக் ஒரு கரிம கனிம வகையைச் சேர்ந்த பரந்த நிறமாலை கொண்ட பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் முகவர் ஆகும். இது மண்ணின் வளத்தையும் அதிகரிக்கும்.
  • உயிரியல் கரிம சாறுகள் மற்றும் இயற்கை தாதுக்கள் இணைந்த இவற்றின் சேர்க்கைகள் தாவர பூஞ்சையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சாம்பல் பூஞ்சை நோய்க்கு எதிராக போராட தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் தாவர உணவு ஊட்டச்சத்துகளாக செயல்படுகிறது. இது தாவரத்தில் எந்த விதமான எச்சங்களையும் ஏற்படுத்துவது இல்லை.
  1. சைமோ BLT100: இது தூள் வடிவில் கிடைக்கிறது. மேலும் இது மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் உயிரி ஊக்கப்படுத்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இது ஒரு பரந்த நிறமாலை கொண்ட உயிரி-முகவர் ஆகும். இது தக்காளியின் முன்பருவ இலைக்கருகல், பின்பருவ இலைக்கருகல் மற்றும் செப்டோரியா இலைப்புள்ளி நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • சைமோ BLT 100 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவை இணைந்து தக்காளியின் முன்பருவ இலைக்கருகல், பின்பருவ இலைக்கருகல் மற்றும் செப்டோரியா இலைப்புள்ளி போன்ற நோய்களுக்கு ஒரு தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கப்படுகிறது. இதே நோய்களுக்கான உடனடி தீர்வாக இந்த இரண்டு உயிர் பூச்சிக்கொல்லிகளுடன் ஜிமோ பயோகார்டு தெளிக்கப்படுகிறது.
  • நோய் தாக்கிய உடனேயே முதல் ஸ்பிரே செய்யப்படுகிறது. நோய் தீவிரமடைந்தவுடன் மற்றொரு தெளிப்பு 5-7 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால், நோயை கட்டுப்படுத்த முடியும்.
  1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.
  • சைமோ பக்ட்ரோலின் முக்கிய நன்மையாக, இதில் உள்ள ஆல்கலாய்டுகள் தாவர SAR (Systemic Acquired Resistance – முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கிறது. 
  • இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் குறிப்பாக வைரஸை பரப்பக்கூடிய வண்டுகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை குறிவைத்து அழிக்கிறது.
  • பரிந்துரைக்கப்பட்ட டோஸ் 1.5 மில்லி/லிட்டர். சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் தக்காளியில் உள்ள தக்காளி புள்ளி வாடல் வைரஸைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  1. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது மற்றும் இது அயனி அல்லாத ஆர்கனோசிலிகான் & துணைப் பொருளைக் கொண்டது.
  • இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  1. ஜிமோ தைமோக்ஸ்: இது ஒரு செறிவூட்டப்பட்ட பரந்த நிறமாலை கரிம பூஞ்சை மற்றும் பாக்டீரியாவினைக் கட்டுப்படுத்தும் முகவர் ஆகும்.
  • இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் செறிவு, தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைக் கொண்டுள்ளது.
  • ஜிமோ தைமோக்ஸ் பாக்டீரியா இனங்கள், சாம்பல் நோய் மற்றும் புசாரியம் வாடல் நோய்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள உயிர் பூச்சிக்கொல்லியாகும்.
  • சைமோ BLT 100 + ஜிமோ தைமோக்ஸ் வாடல் மற்றும் சாம்பல் நோய்களை கட்டுப்படுத்த தெளிக்கப்படுகிறது மற்றும் ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் மருந்தாக பாக்டீரியல் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.
  • இதில் உள்ள தாவர சாறுகள் தாவர SAR-ஐ (Systemic Acquired Resistance- முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கின்றன. இந்த உயிர் பூச்சிக்கொல்லி புழுக்களுக்கு எதிராக அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது குறிப்பாக பூச்சிகளின் லார்வா நிலையை குறிவைத்து அழிக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்ளும் இயக்கத்தைத் தடுக்கிறது.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் மற்றும் ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவை வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒரு நோய்த்தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும். இதன் மூலம் தக்காளி புள்ளி வாடல் வைரஸைக் கட்டுப்படுத்தலாம். தொற்று கடுமையாக இருக்கும் போது 5-7 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இதே போன்று தெளிக்கவும்.
  1. மெர்லின் நியூட்ரிக்ஸ்: இது ஒரு நுண்ணூட்டச்சத்து. இது ஒட்டுமொத்த தாவர வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது.
  • ஒளிச்சேர்க்கையின் போது ஒளி ஆற்றலைப் பெறுவதற்குப் பொறுப்பான குளோரோபிளை உருவாக்கத் தேவையான மெக்னீசியம் (Mg) அயனிகளை இத்தயாரிப்பு கொண்டுள்ளது.
  • மெர்லின் நியூட்ரிக்ஸ் தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது இலை சுருட்டு மற்றும் சுருக்கத்தை ஏற்படுத்தும் வைரஸைத் தடுக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • மெர்லின் நியூட்ரிக்ஸ் தக்காளி புள்ளி வாடல் வைரஸ் மற்றும் சாம்பல் நோய் ஆகியவற்றிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இது தாவர அமைப்பின் ஒட்டுமொத்த உடலியல் விளைவை மேம்படுத்துகிறது மற்றும் நோய் வளர்ச்சியைக் குறைக்கிறது.

சான்றிதழ்: UAL தயாரிப்புகள் OMRI மற்றும் ECOCERT ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டுள்ளன. இவை உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் முகவர்கள் ஆகும். OMRI, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரங்களால் சான்றளிக்கப்பட்ட, ZYΜΟ® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிரியல் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. UAL கரிம (இயற்கையான) மற்றும் சுற்றுச்சூழல்-நிலையான தீர்வுகளை வழங்குவதில் மட்டும் உறுதியாக இல்லாமல், மிக உயர்ந்த தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளையும் பராமரிக்கிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்