HomeCropUAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் பூச்சி மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் பூச்சி மேலாண்மை

அரிசிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக முக்கியமான தானியமாக சோளம் திகழ்கிறது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவை வழங்குகிறது. இது உலகம் முழுவதும் சுமார் 19 மில்லியன் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. இருப்பினும், அதன் உற்பத்தியானது களைகள், நோய்கள் மற்றும் பூச்சிகள் போன்ற பல்வேறு காரணிகளால் அச்சுறுத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், ஆசியாவில் குறிப்பாக சீனாவில், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு கடுமையாக உயர்ந்துள்ளது. இது உலகின் பூச்சிக்கொல்லிகளில் பாதியை பயன்படுத்துகிறது. இதனால் பூச்சிகள், நோய் எதிர்ப்பு பெற்றும் மற்றும் புதிய பூச்சி உருவாகும் சிக்கல்களை விளைவித்துள்ளது. எனவே, உயிர்-முகவர்கள் மற்றும் உயிர்-பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

பூச்சிகளின் பட்டியல்:

  1. அமெரிக்கன் படைப்புழு
  2. தண்டு துளைப்பான்
  3. அசுவினி
  4. குருத்து ஈ

1. அமெரிக்கன் படைப்புழு:

அறிவியல் பெயர்: ஸ்போடோப்டிரா ஃபுரூஜிஃபெர்டா

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு

அறிகுறிகள்:

  • வளர்ந்த அந்துப்பூச்சிகள் கீழ் இலைகளின் அடிப்பகுதியில் முட்டையிடுகின்றன. இது கம்பளி போன்ற பொருட்களால் மூடப்பட்டிருக்கும். 
  • இளம் லார்வாக்கள் இலைகளை உண்கின்றன. இதனால் வெளிப்படையான ஜன்னல் போன்ற சேதம் அல்லது கீறல் ஏற்படுகிறது.
  • பெரிய லார்வாக்கள் இலைகளில் பெரிய கிழிந்த மற்றும் நீளமான துளைகளை ஏற்படுத்துகின்றன. இது இலை துண்டாக்கப்பட்டது போன்ற தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.
  • லார்வாக்கள் சோளத் தட்டுகள், தண்டுகள், கதிர்கள் மற்றும் பூட்டைகளில் துளையிட்டு சேதப்படுத்தி கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றன.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் வாடி, வளர்ச்சி குன்றி, மஞ்சள் மற்றும் குருத்து காய்தல் அறிகுறிகளைக் காட்டுகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு/முற்காப்பு:

தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்  1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

தீர்வு:

தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 1.2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. தண்டு துளைப்பான்:

அறிவியல் பெயர்: கிலோ பார்டெலஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு

தண்டு துளைப்பானின் அறிகுறிகள்:

  • நடுப்பகுதி குருத்து காய்ந்து “இறந்த குருத்து” அறிகுறியை உருவாக்குகிறது.
  • லார்வாக்கள் நடுப்பகுதியை தோண்டி உள்ளே சென்ற பின், தண்டின் உள் திசுக்களை உண்கின்றன.
  • தண்டின் முனைகளுக்கு அருகில் துளைகள் தெரியும்.
  • பொதுவாக, “சுட்ட துளை” அறிகுறியானது, இளம் லார்வாக்கள் மென்மையான இலைகளில் ஊர்ந்து அவற்றை உண்பதால் ஏற்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட தண்டு பகுதிகளில், புழுக்கள் குடைந்து இருக்கலாம்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு/முற்காப்பு:

தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்  1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

தீர்வு:

தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. அசுவினி:

அறிவியல் பெயர்: ரோபாலோசிஃபம் மெய்டிஸ்.

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

அசுவினியின் அறிகுறிகள்:

  • அசுவினிகளின் காலனி மைய இலை சுழல், தண்டுகள் அல்லது பேனிக்கிள்களில் காணப்படுகின்றன.
  • இலைகள் மஞ்சள் நிற மச்சம் மற்றும் விளிம்புகளில் நெக்ரோசிஸ் ஆகியவற்றைக் காட்டுகின்றன.
  • அசுவினிகள் தேன்பனி போன்ற பொருளை உற்பத்தி செய்கின்றன. இது எறும்புகளை ஈர்க்கும் மற்றும் கரும்பூஞ்சான் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு ஒட்டும் பொருளாகும்.
  • தேன்பனி போன்ற பொருள் அறுவடைக்கு இடையூறாகி, தானியங்களின் தரத்தைக் குறைக்கும்.
  • அசுவினிகள் மக்காச்சோளச் செடிகளுக்கு வைரஸ் நோய்களையும் பரப்பலாம்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு/முற்காப்பு:

தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்  1.5 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

தீர்வு:

தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1-2  மில்லி + 1.2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. குருத்து ஈ:

அறிவியல் பெயர்: அதெரிகோனா ஓரியன்டாலிஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: மத்திய தளிர் மற்றும் தண்டு

அறிகுறிகள்:

  • முதிர்ந்த ஈக்கள் தண்டுகளில் அல்லது இளம் நாற்றுகளின் அடிப்பகுதியில் முட்டையிடும்.
  • லார்வாக்கள் தளிர்களை உண்கின்றன மற்றும் தண்டுக்குள் துளையிடுகின்றன. இதனால் மைய தளிர்கள் வாடி இறந்துவிடும். இது “இறந்த குருத்து” என்று அழைக்கப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள்-பச்சை நிறமாகி துளிர்விடுகின்றன. மேலும், நாற்றுகள் வளர்ச்சி குன்றியதாக மாறும். புதிய தளிர்கள் மீது லார்வாக்கள் நுழையும் இடத்தில் சிறிய வட்ட வடிவ வெட்டுக்கள் தெரியும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு/முற்காப்பு:

தடுப்பு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்  1-2 மில்லி + 0.10 மில்லி 1-2 3-5 வாரங்கள் ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

தீர்வு:

தீர்வு அளவு / லிட்டர் தண்ணீர் தெளிப்புகளின்‌ எண்ணிக்கை இடைவெளி பயன்பாட்டு முறை
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 1.2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

தயாரிப்புகள்:

உயிர் பூச்சிக்கொல்லிகள் மக்காச்சோளப் பயிர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை தண்டு துளைப்பான், அமெரிக்கன் படைப்புழு, குருத்து ஈ மற்றும் அசுவினி போன்ற பல்வேறு பூச்சிகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கும். மேலும், உயிர் பூச்சிக்கொல்லிகள் ஊட்டச்சத்து மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்காச்சோளத்தின் வளர்ச்சி மற்றும் மகசூலை மேம்படுத்துகிறது. மக்காச்சோளப் பயிர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சில UAL கரிம உயிர் பூச்சிக்கொல்லிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. சைமோ பக்ட்ரோல் 
  2. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  3. ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்

1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள், தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.

  • சைமோ பக்ட்ரோலின் முக்கிய நன்மையாக, இதில் உள்ள ஆல்கலாய்டுகள் தாவர SAR (Systemic Acquired Resistance – முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கிறது. 
  • இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் குறிப்பாக இலை சுருட்டு வைரஸை பரப்பக்கூடிய வெள்ளை ஈக்களை குறிவைத்து அழிக்கிறது.
  • சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் அசுவினிகளின் தாக்கத்தைக் கண்டவுடன் உடனடியாக தெளிக்கப்படுகிறது. பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் 3-4 வார இடைவெளியில் மீண்டும் தெளிக்கவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவு 1.5 மில்லி/லி. பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால், 5-7 நாட்களில் இரண்டாவது முறை தெளிக்க வேண்டும்.
  • சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் என்ற மருந்தை மக்காச்சோளத்தின் அனைத்து பூச்சிகளுக்கும் எதிராகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் தெளித்த பிறகு, தேவைப்பட்டால் 5-7 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்கவும்.
  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது.   இது தாவரவியல் சாறுகள், தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.
  • இதில் உள்ள தாவர சாறுகள் தாவர SAR-ஐ (Systemic Acquired Resistance- முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கின்றன. இந்த உயிர் பூச்சிக்கொல்லி புழுக்களுக்கு எதிராக அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது குறிப்பாக பூச்சிகளின் லார்வா நிலையை குறிவைத்து அழிக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்ளும் இயக்கத்தைத் தடுக்கிறது.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் அமெரிக்கன் படைப்புழு, தண்டு துளைப்பான் மற்றும் குருத்து ஈ ஆகியவற்றின் மேலாண்மைக்கான தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரமின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர். தொற்று கடுமையாக இருக்கும் போது 5-7 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இதே போன்று தெளிக்கலாம்.
  1. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது மற்றும் இது அயனி அல்லாத ஆர்கனோசிலிகான் & துணைப் பொருளைக் கொண்டது.
  • இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் என்ற தெளிப்புக் கரைசலை, மக்காச்சோளப் பயிரின் அனைத்து நோய் பூச்சிகளுக்கும் எதிராக 0.10 மில்லி/லிட்டர் என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.

சான்றளிப்பு: UAL தயாரிப்புகள் உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் முகமைகளான ECOCERT மற்றும் OMRI ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளன. UAL ஆனது ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் ஆர்கானிக் உயிர்-தீர்வுகளைத் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்தியாவில் UAL இரண்டு உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. அவை ISO 9001:2015, ISO 14001:2015, ISO 45001-2018, மற்றும் HACCP சான்றளிக்கப்பட்ட ISO 14001 2015 என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளுக்கான சர்வதேச தரமாகும். எனவே இதன் சான்றளிப்பின் மூலம் UAL தயாரிப்புகள்  சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையும், சுற்றுச்சூழல் செயல்திறனை மேம்படுத்தும் என்று உறுதியளிக்கிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்