HomeCropUAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் நோய் மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் நோய் மேலாண்மை

மக்காச்சோளம் என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பலருக்கு உணவளித்து ஆதரிக்கும் ஒரு முக்கிய தானியப் பயிராக இருந்தாலும், கட்டுப்பாட்டு முறைகள் தேவைப்படும் பல நோய்களால் பாதிக்கப்படுகிறது. வழக்கமான பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு, காலப்போக்கில் அவற்றின் செயல்திறனை இழக்கும். உயிர் பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் நோய்களை நன்கு கட்டுப்படுத்தும். அவை நோய் மேலாண்மைக்கு வழக்கமான இரசாயனங்களை விட சிறந்தவை.

நோய்களின் பட்டியல்

  1. அடிச்சாம்பல் நோய் 
  2. துரு நோய் 
  3. இலைக் கருகல் நோய்
  4. கரிக்கோல் அழுகல்
  1. அடிச்சாம்பல் நோய்:

அறிவியல் பெயர்: பெரனோஸ்கிளிரோஸ்போரா சொர்க்கி

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள் மற்றும் ஆண் மலர்கள் 

அடிச்சாம்பல் நோயின் அறிகுறிகள்:

  • குளோரோசிஸ் போன்ற முறையான தொற்று 10-14 நாட்களுக்குள் தோன்றும்.
  • பொதுவாக, இலைகள் மிகவும் மேல்நோக்கியும் மெல்லியதாகவும் இருக்கும்.
  • ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்கள் நோய்த்தொற்றுக்குப் பிறகு நான்கு வாரங்களுக்குள் இறக்கின்றன.
  • ஆரம்பத்தில் கீழ் மேற்பரப்பில் பாதி, பச்சையத்தை இழக்கும்.
  • பின்னர், குளோரோசிஸ் படிப்படியாக முழு இலை மேற்பரப்பிலும் தோன்றும்.
  • ஈரப்பதமான, வெதுவெதுப்பான வெப்பநிலையில், இலையின் அடிப்பகுதி வெண்மையான, சாம்பல் பூச்சு வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
  • முறையான நோய்த்தொற்று உள்ள தாவரங்கள் பூட்டை உற்பத்தி செய்யாது. மேலும் அவை சிறியதாகவும், மோசமாகவும் தானியங்களால் நிரம்பியிருக்கும். இது புதர் போல் தெரிகிறது. இது “கிரேஸி டாப்” என்று அழைக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1-2 கிராம்+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  இலை வழி தெளிப்பு

நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1-2 கிராம்+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  இலை வழி தெளிப்பு
  1. துரு நோய்:

அறிவியல் பெயர்: பக்ஸீனியா சொர்க்கி

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

துரு நோயின் அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில், இலைகளின் இருபுறமும் சிறிய குளோரோடிக் புள்ளிகளைக் காணலாம்.
  • இரண்டு கீழ் இலை பரப்புகளிலும் வட்டம் முதல் நீளமான, வெடிப்பு, சிவப்பு-பழுப்பு நிற யூரேடோ கொப்புளங்கள் காணப்படும்.
  • பயிர் முதிர்ச்சியடையும் போது, பழுப்பு-கருப்பு நிற கொப்புளங்கள் தோன்றும்.
  • நோய்த்தொற்று தீவிரமாக இருக்கும் போது, இலைகள் காய்ந்து உதிர்ந்து போக ஆரம்பித்து, உறை மற்றும் பிற பகுதிகளுக்கு பரவக்கூடும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1-2 கிராம்+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  இலை வழி தெளிப்பு

 நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
ஜிமோ தைமோக்ஸ் + சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1 கிராம்+ 1-2 கிராம்+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  இலை வழி தெளிப்பு
சைமோ பயோஃபெர்ட்+ ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  2-4 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  இலை வழி தெளிப்பு
  1. இலைக் கருகல் நோய்

அ. தெற்கு இலைப்புள்ளி/மெய்டிஸ் இலை கருகல் நோய்

அறிவியல் பெயர்: காக்கிடோபோலஸ் ஹெட்டிரோஃஸ்ட்ரோபஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

தெற்கு இலைப்புள்ளி, மெய்டிஸ் இலை கருகல் நோயின் அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில், கீழ் இலைகளில், புள்ளிகள் 2.5 செ.மீ நீளம் மற்றும் 2-6 மி.மீ அகலம் வரை முட்டை வடிவில் இருந்து செவ்வக வடிவமாக வளரும். அதே சமயம் இலைகளில் உள்ள நரம்புகளால் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
  • புள்ளிகள் அடர் பழுப்பு நிற விளிம்புடன் மையத்தில் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • புள்ளிகள் பெரிதாகவும் ஒன்றிணைந்து இலைகள் காய்ந்து இறக்கின்றன.

ஆ. துருக்கிய இலைக்கருகல்:

அறிவியல் பெயர்: எக்செரோஹிலம் துர்க்கியம் & ஹெல்மின்தோஸ்போரியம் மெய்டிஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

துருக்கிய ப்ளைட்டின் அறிகுறிகள்:

  • கீழ் இலைகளில் சாம்பல்-பச்சை முதல் பழுப்பு நிற, நீளமான, சுருட்டு வடிவ புண்கள் காணப்படும்.
  • புண்கள் 1 முதல் 6 அங்குலம் வரை இருக்கும் மற்றும் மெல்லிய மற்றும் நீளவாக்கில், முனைகளில் குறுகலாக இருக்கும். 
  • புண்கள், இலையின் விளிம்புகளுக்கு இணையாக ஒன்றிணைந்து முன்னேறும்போது இலையை மூடிவிடும்.
  • இலையின் கீழ் பகுதியில், வித்திகள் உருவாகின்றன.
  • பூஞ்சையானது புண்களுக்கு கீழே தூசி படிந்த கருப்பு அல்லது பச்சை வித்திகளை உருவாக்குகிறது.
  • இலைகள் உடையக்கூடிய மற்றும் சாம்பல்-பச்சை நிறமாக மாறும், அவை உறைந்திருப்பது போல் தோன்றும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ BLT 100 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம்+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  இலை வழி தெளிப்பு

நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ BLT100 + ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  2 கிராம் + 1 கிராம்+ 2-3 கிராம் 2-3 5-7 நாட்கள்  இலை வழி தெளிப்பு
  1. கரிக்கோல் அழுகல் நோய்:

அறிவியல் பெயர்: மேக்ரோஃபோமினா ஃபேஸியோலினா

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள் மற்றும் தண்டுகள்.

கரிக்கோல் அழுகலின் அறிகுறிகள்:

  • தாவரங்களில் வாடுவதற்கான அறிகுறிகள் உள்ளன.
  • தாவரங்கள் முதிர்ச்சி அடையும் போது, பூஞ்சை தண்டுகளின் கீழ் முனைகளில் பரவுகிறது. இதன் விளைவாக முன்கூட்டியே முதிர்ச்சி அடைதல்,  குருத்து பகுதியில் பிளவுபடுதல் மற்றும் துண்டாக்கப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட தாவரத்தின் தண்டில் சாம்பல் நிறத்தில் ஒரு கோடு உள்ளது.
  • உட்புறத் திசுக்கள் துண்டாக்கப்பட்டு, வாஸ்குலர் பகுதியில் சிறிய, சாம்பல்-கருப்பு ஸ்கெலரோடியா தோன்றும்.
  • சில நேரங்களில், உட்புறத் திசுக்கள் துண்டாகுதல் காரணமாக குருத்துப் பகுதியில் தண்டு உடைந்துவிடும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு/முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம்+ 2 கிராம்+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  இலை வழி தெளிப்பு

நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ BLT100 + ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 2 கிராம் + 1 கிராம்+ 2-3 கிராம் 2-3 5-7 நாட்கள்  இலை வழி தெளிப்பு

தயாரிப்புகள்:

வழக்கமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் மற்றும் நன்மை பயக்கும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் பூச்சிகளின் நோய் எதிர்ப்பின் காரணமாக காலப்போக்கில் அவற்றின் செயல்திறனைக் குறைக்கும். நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க, இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு உயிர் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது நல்லது. அவற்றின் பரவல் மற்றும் தாவர ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு ஒட்டும் திரவம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களுடன் சேர்த்து அவற்றைப் பயன்படுத்தலாம். பல்வேறு பயிர்களுக்கு ஏற்ற வகையிலான கரிமப் பொருட்களை UAL வழங்குகிறது. அவை பின்வருமாறு:

  1. ஜிமோ பயோலாஜிக் 
  2. சைமோ BLT100
  3. சைமோ பயோகார்டு WLT6040
  4. சைமோ தைமோக்ஸ் 
  5. சைமோ பயோஃபெர்ட் 
  6. ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்

1. ஜிமோ பயோலாஜிக்: இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இதில் ஆர்கனோமினரல்ஸ், பேரூட்டச்சத்துகள் மற்றும் நிலைப்படுத்திகள் போன்றவை உள்ளது.

  • இதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்க முடியும். இது அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
  • இதில் உள்ள உயிர் கரிம சாறுகள் மற்றும் இயற்கை தாதுக்கள் தாவர பூஞ்சையைக் கட்டுப்படுத்தவும், தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், துரு நோயை எதிர்த்துப் போராடவும், பூஜ்ஜிய தாவர எச்சங்களுடன் தாவர உணவு ஊட்டச்சத்துக்களாக செயல்படவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஜிமோ பயோலாஜிக்+ ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் இரண்டும் அடிச்சாம்பல் நோய் மற்றும் துருவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பரந்த அளவிலான பயன்பாடு கொண்ட உயிரி முகவர் ஆகும்.
  • ஜிமோ பயோலாஜிக் + சைமோ BLT 100 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் அதே நோய்க்கான உடனடித் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. 
  1. சைமோ BLT100: இது தூள் வடிவில் கிடைக்கிறது. மேலும் இது மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் உயிரி ஊக்கப்படுத்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • சைமோ BLT 100 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் கருகல் நோய்களுக்கான நோய்த்தடுப்பு தெளிப்பாக முதலில் பயன்படுத்தப்படுகிறது. 
  • நோய்த் தாக்குதலுக்குப் பிறகு, அடிச்சாம்பல் நோய், கருகல் மற்றும் துரு ஆகிய நோய்களுக்கு எதிராக சைமோ BLT 100 + ஜிமோ பயோலாஜிக் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் மருந்தை தெளிக்கவும். நோய் தீவிரமடைந்தவுடன், 5-7 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறை தெளிக்க வேண்டும்.
  1. ஜிமோ பயோகார்டு WLT6040: இத்தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் அதில் மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், புரோட்டியோலிடிக் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள், உயிரியல் ஊக்கப்படுத்திகள் உள்ளன.
  • கரும்பின் ஃபுசேரியம் வாடல் நோய்க்கு 2 கிராம்/லிட்டர் என்ற விகிதத்தில் இது பரிந்துரைக்கப்படுகிறது.
  • மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் போதுமான ஊட்டச்சத்துக்களுடன் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளை பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை மறுத்து இறுதியாக SAR (முறையான வாங்கிய எதிர்ப்புத் திறனை) தூண்டுகிறது. 
  • ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ பயோலாஜிக்+ ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் மூன்றையும் மண்ணில் ஊற்ற துரு மற்றும் கரிக்கோல் அழுகல் நோயைக் குணப்படுத்த முடியும். நோய் கடுமையாக இருந்தால், 5-7 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மற்றொரு முறை தெளிக்கலாம்.
  • ஜிமோ பயோகார்டு WLT6040 மட்டும் நோய் தடுப்பு நடவடிக்கையாக, கரிக்கோல் அழுகலை நிர்வகிக்க முடியும். பரிந்துரைக்கப்பட்ட அளவு 2 கிராம்/லிட்டர்.
  1. ஜிமோ தைமோக்ஸ்: இது ஒரு செறிவூட்டப்பட்ட பரந்த நிறமாலை கரிம பூஞ்சை மற்றும் பாக்டீரியாவினைக் கட்டுப்படுத்தும் முகவர் ஆகும்.
  • இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் செறிவு, தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைக் கொண்டுள்ளது.
  • நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஜிமோ தைமோக்ஸ் மற்றும் ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவை அடிச்சாம்பல் நோய் மற்றும் துரு நோய்க்கு எதிராக தெளிக்கப்படுகின்றன. நோய் கடுமையாக இருந்தால் 3-4 வார இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்கவும். ஜிமோ பயோலாஜிக் + ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவை அடிச்சாம்பல் நோய்க்கு ஒரு உடனடித் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. நோய் தீவிரமான நிலையில் இருந்தால் 5-7 நாட்கள் இடைவெளியில் 1 முதல் 2 மில்லி /லிட்டர் என்ற அளவில் இரண்டாவது முறை தெளிக்க வேண்டும்.
  1. சைமோ பயோஃபெர்ட்: இது தூள் வடிவில் கிடைக்கும் நுண்ணூட்டச் சத்து. இத்தயாரிப்பில் தூண்டுதலை ஏற்படுத்தும் உயிரிகள், மண் சீரமைப்பாளர்கள் மற்றும் உயிர் சார்ந்த கனிமங்கள் போன்றவை உள்ளன.
  • சைமோ பயோஃபெர்டின் முக்கிய நன்மையாக, இது தாவரத்தின் முக்கியமான வளர்ச்சிக் கட்டமான விதை முளைப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மற்றும் மண்ணின் அயனி பரிமாற்றும் திறனை அதிகரிக்கிறது. பாஸ்பரஸ் உறிஞ்சுதலை அதிகரிப்பது மற்றும் பொட்டாசியம் அயனிகளை உறிஞ்சி சேமித்து வைப்பதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இது விரும்பத்தக்க மண் நுண்ணுயிரிகள், பாசிகள் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் தூண்டுகிறது.
  • சைமோ பயோஃபெர்ட் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊட்டச்சத்து நிரப்பியாக பரிந்துரைக்கப்படுகிறது.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு 2-4 கிலோ ஏக்கர்.
  • சைமோ பயோஃபெர்ட் + சைமோ பயோடானிக் இரண்டும்‌ அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் மக்காச்சோளத்தில் 2-4 கிலோ / ஏக்கருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது மக்காச்சோளத்தில் கருகல் மற்றும் கரிக்கோல் அழுகல் ஆகியவற்றிற்கு எதிராக தெளிக்கப்படுகிறது.
  1. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது மற்றும் இது அயனி அல்லாத ஆர்கனோசிலிகான் & துணைப் பொருளைக் கொண்டது.
  • இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் 0. 10 மில்லி / லிட்டர் என்ற விகிதத்தில் மக்காச்சோளத்தின் சாம்பல் நோய், துரு நோய் மற்றும் கருகல் ஆகியவற்றிற்கு எதிராக பயன்படுத்தலாம்.

சான்றிதழ்: UAL என்பது தொலைநோக்கு மற்றும் பணி சார்ந்த நிறுவனமாகும். இது புதுமை, கற்பனை மற்றும் வேறுபட்ட வாடிக்கையாளர் சேவை மூலம் அதன் இலக்குத் துறைகளுக்கு, சுற்றுச்சூழல்-நிலையான உயிர்-தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் போற்றப்படும் உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டுள்ளது. EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டு, ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிர் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. UAL தயாரிப்புகள் பாதுகாப்பானவை, இயற்கையானவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை உறுதிசெய்து, கரிம வேளாண்மையின் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்